search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொதுமக்கள் சாலை மறியல்"

    • மோகனூர் ஊராட்சி ஒன்றியம், மணப்பள்ளி பஞ்சாயத்தில் மொத்தம் 9 வார்டுகள் உள்ளன.
    • இந்த பஞ்சாயத்துக்கு உட்பட்ட சென்னாக்கல்புதூர் பகுதியில், கடந்த 10 நாட்களாக தண்ணீர் விநியோகம் நிறுத்தப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம், மோகனூர் ஊராட்சி ஒன்றியம், மணப்பள்ளி பஞ்சாயத்தில் மொத்தம் 9 வார்டுகள் உள்ளன. அவற்றில், குடியிருக்கும் மக்களுக்கு, பஞ்சாயத்து சார்பில் குடிநீர் இணைப்பு மூலமும், பொது குழாய்கள் மூலமும், தினமும் காவிரி குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

    இந்த பஞ்சாயத்துக்கு உட்பட்ட சென்னாக்கல்புதூர் பகுதியில், கடந்த 10 நாட்களாக தண்ணீர் விநியோகம் நிறுத்தப்பட்டது. இது குறித்து, அப்பகுதி பொதுமக்கள் பஞ்சாயத்து நிர்வாகத்திடம் பலமுறை புகார் செய்தும், குடிநீர் விநியோகம் செய்ய எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    அதனால், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், டீக்கடை, ஓட்டல்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் நடத்துவோர் உள்ளிட்டோர் குடிநீர் தேவைக்காக காசு கொடுத்து தண்ணீர் வாங்கி பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டனர். பஞ்சாயத்து நிர்வாகத்தினர், குடிநீர் இணைப்பில் உள்ள மோட்டார் பழுத டைந்துவிட்டதால் அதை சரி செய்த பிறகுதான் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்று காரணம் கூறியதாக தெரிகிறது.

    இதனால் பஞ்சாயத்து நிர்வாகத்தை கண்டித்து, சென்னாக்கல்புதூர் கிராம மக்கள், பெண்கள் உள்பட ஏராளமானவர்கள் காலி குடங்களுடன் மெயின் ரோட்டிற்கு வந்தனர். அவர்கள் மோகனூர் - பரமத்தி நெடுஞ்சாலையில் உட்கார்ந்து திடீர் என சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்கு வரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.

    கார், பஸ் உள்ளிட்ட வாகனங்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன. இருபுற மும் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன. பஸ்களில் இருந்து பயணிகள் தாங்கள் செல்லவேண்டிய இடங்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாமல் கடும் அவதி அடைந்தனர்.

    இதுபற்றிய தகவல் அறிந்த மோகனூர் போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று, மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, தடையின்றி குடி தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்த னர். அதையடுத்து, ஒரு மணி நேரம் நடந்த மறியல் போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டு கலைந்து சென்றனர். அதன் பின்னர் நீண்ட வரிசையில் காத்து நின்ற வாகனங்கள் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டன.

    இது குறித்து, மணப்பள்ளி பஞ்சாயத்து தலைவர் இந்துமதி கூறும்போது, காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைவாக உள்ளதால், மோட்டார் ரூம் அருகே தண்ணீர் வருவதில்லை. மேலும் மோட்டாரும் பழுதாகிவிட்டது. அவற்றை விரைந்து சரி செய்து, மணலை அப்புறப்படுத்தி, தடையின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.

    • மங்கலம் போலீசார் மற்றும் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் விஜயலட்சுமி, ரவிசந்திரன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
    • பொதுமக்கள் கலைந்து செல்ல மறுப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகிலுள்ள ராமிரெட்டிபட்டி கிராமம் ஆயாமரம் பகுதியை சேர்ந்தவர் சின்னத்தம்பி (வயது 54). இவரது விவசாய நிலத்திற்கு அருகில் அரசுக்கு சொந்தமான 2 சென்ட் நிலம் உள்ளது.

    இந்த நிலத்தில் தற்போது ஊராட்சி ஒன்றிய ஆணையாளரின் உத்தரவின் பேரில் பொதுமக்கள் தேவைக்காக குடிநீர் தொட்டி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் அந்த இடத்தில் குடிநீர் தொட்டி அமைக்க கூடாது என்று கூறி சின்னத்தம்பி குடும்பத்தினர் கம்பி அமைத்து விட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு வந்து நேற்று தாரமங்கலத்தில் இருந்து ஜலகண்டபுரம் செல்லும் சாலையில் ஆயாமரம் பகுதியில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

    அப்போது இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்தார்.

    மங்கலம் போலீசார் மற்றும் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் விஜயலட்சுமி, ரவிசந்திரன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பொதுமக்கள் கலைந்து செல்ல மறுப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மறியலில் ஈடுபட்ட 45 பேரை போலீசார் கைது செய்து தாரமங்கலத்தில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

    அதனை தொடர்ந்து அரசுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து கம்பி வேலி அமைத்ததால் ஆணையாளர் விஜயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் சின்னத்தம்பி,விஜயா, கார்த்தி, குருநாதசாமி, பெரியம்மாள், ராஜி, தங்கவேல்,சரோஜா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • பஸ்களை சிறை பிடித்தனர்
    • தாசில்தார் அலுவலகத்தையும் முற்றுகையிட்டனர்

    திருப்பத்தூர்:

    தமிழகம் முழுவதும் நீர்நிலை பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோர்ட் உத்தரவிட்டுள்ள நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் தண்டபாணி கோவில், சிவராஜ்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

    இதனிடையே அந்த பகுதிகளில் சுமார் 800-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் 3 தலைமுறைகளாக வசித்து வருவதாக கூறப்படும் நிலையில், நகராட்சி சார்பில் ஆக்கிரமிப்புகளை இடிக்கும் பணி துவங்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தியதால் இடிப்பு பணி தற்காலிகமாக கைவிடப்பட்டது.

    இந்த நிலையில் இன்று ஆக்கிரமிப்புகளை இடிக்கும் பணி நடைபெற உள்ளதாக நேற்றைய தினம் நகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது.

    அதன்படி இன்று காலை பொக்லைன் எந்திரங்களை கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக நீர்வளத்துறை சார்பில் நகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற முயற்சி செய்தனர்.

    இதற்கு கண்டனம் தெரிவித்து 200-க்கும் மேற்பட்ட மக்கள் திருப்பத்தூர்-பொன்னியம்மன் கோயில் சாலை பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் வெளியே வரும் சாலை செல்லும் சாலையில் அரசு பஸ்சை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். அங்கு 150-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களிடம் கோட்டாட்சியர் லட்சுமி, தாசில்தார் சிவப்பிரகாசம் பேச்சுவார்த்தை நடத்தி 10, நாட்கள் அவகாசம் அளிப்பதாக உறுதி அளித்ததன் பேரில் 2 மணி நேரம் சாலை மறியலை அப்பகுதி மக்கள் கைவிட்டு கலைந்து சென்றனர்.

    மேலும் நேற்று இரவு இதே கோரிக்கை முன்வைத்து நல்லதம்பி எம்எல்ஏ வீடு மற்றும் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டும வீடுகளை இடிக்க கூடாது என கோரிக்கைகளை வைத்தனர்.

    பின்னர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் திருப்பத்தூரில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    • பஸ் கடந்த சில மாதங்களாக எவ்வித முன்னறிவிப்பும் இன்றி நிறுத்தப்பட்டது. இதனால் பள்ளி மாணவர்கள், தொழிலாளர்கள் மிகுந்த அவதியடைந்தனர்.
    • பழனி-உடுமலைப்பேட்டை சாலையில் திடீரென தரையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பழனி:

    பழனி அருகில் உள்ள நெய்காரப்பட்டிக்கு சின்னகாந்திபுரம், வாய்க்கால்பட்டி வழியாக புளியம்பட்டி மார்க்கத்தில் அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. இந்த பஸ் கடந்த சில மாதங்களாக எவ்வித முன்னறிவிப்பும் இன்றி நிறுத்தப்பட்டது. இதனால் பள்ளி மாணவர்கள், தொழிலாளர்கள் மிகுந்த அவதியடைந்தனர்.

    நீண்டதூரம் நடந்து வந்தும் ஆட்டோ மற்றும் தனியார் வாகனங்களில் கூடுதல் கட்டணம் செலுத்தியும் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் போக்குவரத்து கழக அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் மனுக்கள் அனுப்பியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆவேசமடைந்த அப்பகுதி மக்கள் இன்று பழனி-உடுமலைப்பேட்டை சாலையில் திடீரென தரையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் கேட்காமல் போராட்டத்தை தொடர்ந்ததால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    • நல்லூர் மேற்குக் களத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் குடியிருப்புக்கு தனியார் பட்டா நிலத்தின் வழியாக சென்று வந்துள்ள னர்.
    • பாதை அடைக்கப்பட்டதால் அரவங்குறிச்சியிலிருந்து கோட்டையூர் செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    செந்துறை:

    ‌நத்தம் அருகே கோட்டை யூர் ஊராட்சிக்குட்பட்ட நல்லூர் மேற்குக் களத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் குடியிருப்புக்கு தனியார் பட்டா நிலத்தின் வழியாக சென்று வந்துள்ள னர். நிலத்தின் உரிமையாளர் திடீரென்று தனது நில த்தினை அடைத்து விட்டார். எனவே குடியிருப்புகளுக்குச் செல்ல முடியாமல் தவித்தனர். எனவே பாதை அமைக்க வேண்டும் எனக்கோரி திடீரென அரவங்குறிச்சியிலிருந்து கோட்டையூர் செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    தகவலறிந்த நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முனியசாமி, கிராம நிர்வாக அலுவலர் முருகவேல் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்ட மக்க ளுடன் சமரசம் பேசினர். அப்போது நத்தம் தாலுகா தாசில்தாரிடம் இது குறித்து தீர்வு காண பேச்சு வார்த்தை யில் கலந்து கொண்டு முடிவெடுக்க கூறிய ஆலோ சனையை ஏற்று மறியலை கைவிட்ட னர்.

    இதனால் சுமார் 1 மணி நேரம் கோட்டையூர் - அரவங்குறிச்சி வழியாக நத்தம் செல்லும் சாலையில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • தேவாலயத்தில் பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்ததால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் ஒன்றுகூடி வெள்ளோடு சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
    • போலீசார் இருதரப்பினரையும் அழைத்து அமைதி பேச்சுவார்த்தை நடத்தினர்.

    சின்னாளபட்டி:

    திண்டுக்கல் அருகே ஏ.வெள்ளோடு பகுதியில் புனித தெரசா சந்தியாகப்பர் கோவில் உள்ளது. இங்கு பழைய நிர்வாகக்குழுவினருக்கு போட்டியாக புதிய குழு உருவானது. அவர்கள் நிர்வாகத்தை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    ஆனால் இதற்கு பழைய நிர்வாகக்குழு மறுத்தது. இந்தநிலையில் ரூ.40 லட்சம் பணத்தை கையாடல் செய்ததாக கலெக்டர் அலுவலகத்தில் சிலர் புகார் அளித்தனர்.

    பழைய நிர்வாகக்குழு மற்றும் புதிய குழுவினருக்கு இடையே பிரச்சிைன ஏற்பட்டதால் கோவிலில் இருதரப்பினர் சார்பாகவும் 2 பூட்டுகள் போட்டு பூட்டப்பட்டன. அதன் சாவிகள் வி.ஏ.ஓவிடம் ஒப்படைக்கப்பட்டது.

    இன்று வெள்ளோடு பகுதியில் ஒருவர் இறந்துவிட்டார். அவருக்கு அஞ்சலி செலுத்த கோவில் நிர்வாகம் சார்பாக சென்றபோது அங்கிருந்த 2 பூட்டுகளுமே உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் ஒன்றுகூடி வெள்ளோடு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவம் குறித்து அறிந்ததும் திண்டுக்கல் கிழக்கு தாசில்தார் சந்தனமேரி கீதா மற்றும் அம்பாத்துரை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

    அவர்கள் இருதரப்பினரையும் அழைத்து அமைதி பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பழைய நிர்வாகக்குழு தங்களிடம் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என புதிய குழுவினர் தெரிவித்தனர். ஆனால் அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்ததால் முடிவு எட்டப்படவில்லை. உயர் அதிகாரிகள் முன்னிலையில் மறுபடியும் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.

    • உறவினர்கள் அழகம்மாளின் உடலை அடக்கம் செய்ய ஏற்பாடுகளை செய்து முடித்து சடலத்தை சுடுகாட்டிற்கு கொண்டு சென்றனர்.
    • இந்த வழியாக சடலத்தை கொண்டு செல்லக்கூடாது இந்த இடம் எங்களுக்குச் சொந்தமான பட்டா நிலம் என்று அதே ஊரைச் சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    புதியம்புத்தூர்:

    தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் அருகே உள்ள மேல வேலாயுதபுரத்தை சேர்ந்த அழகம்மாள் (வயது 85) என்ற மூதாட்டி நேற்று இறந்துவிட்டார்.

    அவரது உறவினர்கள் அழகம்மாளின் உடலை அடக்கம் செய்ய ஏற்பாடுகளை செய்து முடித்து சடலத்தை சுடுகாட்டிற்கு கொண்டு சென்றனர். அப்போது இந்த வழியாக சடலத்தை கொண்டு செல்லக்கூடாது இந்த இடம் எங்களுக்குச் சொந்தமான பட்டா நிலம் என்று அதே ஊரைச் சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    சடலத்தை சுடுகாட்டுக்கு கொண்டு செல்ல முறைப்படி பாதை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, இறந்தவரின் உறவினர்கள் புதியம்புத்தூர்-தூத்துக்குடி சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். சுமார் 50 பேர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

    மறியல் போராட்ட தகவல் அறிந்ததும் ஒட்டப்பிடாரம் மண்டல துணை தாசில்தார் சுமதி, வருவாய் ஆய்வாளர் சுகுணா, புதியம்புத்தூர் (பொறுப்பு) இன்ஸ்பெக்டர் சண்முகம், சப்-இன்ஸ்பெக்டர் பாலன் ஆகியோர் பஸ் மறியல் செய்தவர்களிடம் பேசினர்.

    இன்று ஒட்டப்பிடாரம் தாலுகா அலுவலகத்தில் வைத்து மயான பாதை குறித்து சமாதான கூட்டம் நடத்தப்பட்டு மயான பாதைக்கு ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தனர். இதையடுத்து பஸ் மறியல் செய்தவர்கள் கலைந்து சென்றனர்.

    • குடியிருப்பில் புகுந்த மழை நீர் வெளியேற வழியின்றி வீடுகளை சூழ்ந்தது.
    • இதனால் குடியிருப்பு வாசிகள் அவதிப்பட்டு வந்தனர்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகே உள்ள கருக்கால்வாடி கிராமம் புகையிலைகாரன் தெருவில் உள்ள குடியிருப்பில் புகுந்த மழை நீர் வெளியேற வழியின்றி வீடுகளை சூழ்ந்தது. இதனால் குடியிருப்பு வாசிகள் அவதிப்பட்டு வந்தனர்.

    இதனிடையே, மழைநீர் வெளியேற உரிய பாதுகாப்பு மற்றும் சாக்கடை வசதி செய்து கொடுக்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து, தாரமங்கலம் - இரும்பாலை பிரதான சாலையில் பவர் கேட் அருகே சாலையில் அமர்ந்து 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மறியல் போராட்டம் நடத்தினர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த தாரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தொல்காப்பியன், சப்-இன்ஸ்பெக்டர் காமராஜர் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். மறியல் போராட்டத்தால் சிறிது நேரம் நேரம் அவ்வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • சென்னூர், கிருஷ்ணாபுரம், மத்திபாளையம் என ஏராளமான கிராமங்கள் உள்ளன.
    • ஒரு மாதமாக ஒரு அரசு பேருந்து மட்டுமே வருகிறது. இதனால் பொதுமக்கள் சிரமம் அடைந்துள்ளனர்.

    வடவள்ளி

    கோவை சிறுவாணி சாலை தண்ணீர்‌பந்தல் அருகே சென்னூர், கிருஷ்ணாபுரம், மத்திபாளையம் என ஏராளமான கிராமங்கள் உள்ளன.

    இந்த கிராமங்களை சேர்ந்தவர்கள் தங்கள் அத்தியாவசிய தேவைகளுக்கும், வேலை மற்றும் மாணவ, மாணவிகள் படிப்பதற்காக அருகே உள்ள தொண்டாமுத்தூர், ஆலாந்துறை கோவை பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

    இதற்காக இந்த பகுதியில் 4 அரசு பஸ்களும் இயங்கி வந்தது. தற்போது ஒரு மாதமாக ஒரு அரசு பேருந்து மட்டுமே வருகிறது. இதனால் மக்கள் மிகவும் சிரமம் அடைந்துள்ளனர். குறிப்பாக பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு சென்று வருவோர் அவதியடைந்துள்ளனர்.

    இதனால் தங்கள் பகுதியில் இயங்கிய பஸ்களை மீண்டும் இயக்க வேண்டும் என பொதுமக்களும் பல முறை போக்குவரத்து அதிகாரிகளிடம் நேரில் கடிதம் கொடுத்துள்ளனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.

    இனறு காலை வழக்கம்போல் வேலைக்கு செல்வோர் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பஸ்சுக்காக அந்த பகுதியில் காத்திருந்தனர். ஆனால் நீண்ட நேரமாக பஸ்வரவில்லை.

    பஸ் தண்ணீர் பந்தல் என்ற இடம் வரை வந்து விட்டு மீண்டும் திரும்பி சென்று விட்டதாக கூற ப்படுகிறது.

    இதை கேள்விப்பட்ட பொதுமக்கள் மற்றும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் சிறுவாணி சாலைக்கு நடந்து வந்தனர். பின்னர் மாதம்பட்டி நான்கு முனை சந்திப்பு வழியாக வந்த அரசு பஸ்சை வழிமறித்து சாலைமறியலில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் போக்குவரத்து அதிகாரிகளிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது கிரா மமக்கள் கூறியதாவது:-

    எங்கள் கிராமங்கள் ‌ மலையையொட்டி இருப்பதால் இரவு நேரங்களில் யானை நடமாட்டம் அதிகமாக இருக்கும். அதனால் ஆட்டோவுக்கு ஆள் ஒன்றுக்கு 120 ரூபாய் கொடுத்து வீட்டிற்கு இரவில் சென்று வருகிறோம். இதற்கே மாதத்தில் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் வரை செலவு செய்கிறோம்.

    மேலும் இங்குள்ள மாணவர்கள் மேல்நிலைப் படிப்பிற்கு ஆலாந்துறை செல்ல வேண்டும். பஸ் இல்லாததால் புத்தக பையை சுமந்த படி 5 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று படித்து வருகின்றனர்.

    எனவே எங்கள் பகுதிக்கு முன்பு போன்று பஸ்களை இயக்க வேண்டும். அந்த பஸ்களும் நேரத்திற்கு சரியாக வர வேண்டும் என தெரிவித்தனர். அதற்கு போலீசார் மற்றும் போக்குவரத்து துறையினர் உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன்பின்னரே அவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
    • 2 வருடங்களுக்கு மேலாகியும் குடோன் இடமாற்றம் செய்யப்பட வில்லை.

    கவுண்டம்பாளையம்

    கோவை துடியலூரை அடுத்த உருமாண்டம்பா ளையம் பகுதியில் காந்தி நகர் உள்ளது. இங்கு 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் கியாஸ் சிலிண்டர் குடோன் உள்ளது. இங்கு தினமும் 100 கணக்காக கியாஸ் சிலிண்டர் கையாளப்படுகிறது. இதனால் குடோனை சுற்றி உள்ள மக்கள் அச்சம் அடைந்து வந்தனர்.

    இதையடுத்து அந்த பகுதி மக்கள் ஒன்று சேர்ந்து கியாஸ் குடோன் உரிமையாளரிடம், கியாஸ் குடோன் குடியிருப்பு பகுதியில் இருப்பது ஆபத்து, எனவே இடமாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.ஆனால் 2 வருடங்களுக்கு மேலாகியும் குடோன் இடமாற்றம் செய்யப்பட வில்லை. இதனால் பொது மக்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் அங்கு சென்று கோரிக்கை வைத்தனர். அப்போது அவர்கள் ஜூலை மாதத்தில் மாற்றி விடுவதாக தெரிவித்துள்ளனர்.

    இடம் மாற்றுவதாக கூறி 2 மாதங்கள் கடந்தும் தொடர்ந்து கியாஸ் குடோன் செல்பட்டு வந்தது. இதனால் இன்று காலை அந்த பகுதி பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    அப்போது அவர்கள் கூறும்போது, இங்கு 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். குழந்தைகள், முதியவர்கள் அதிகளவில் உள்ளனர். குடியிருப்பு பகுதியில் இந்த கியாஸ் குடோன் இருப்பதால் தினமும் அச்சத்துடன் வசித்து வருகிறோம்.

    சில நேரங்களில் கியாஸ் வாசனை அதிகளவில் வருகிறது. அப்போது பயமாக உள்ளது. ஏதாவது அசம்பாவிதம் ஏற்படும் முன்பு கியாஸ் குடோனை இடமாற்றம் செய்ய வேண்டும். பல முறை உரிமையாளரிடம் கோரிக்கை வைத்தும் பலனில்லை எனவே சாலை மறியலில் ஈடுபட்டோம் என்றனர்.

    இதுகுறித்து துடியலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். சாலை மறியலால் 1 மணி நேரத்துக்கும் மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • சரவணப்பொய்கையை மீண்டும் பயன்படுத்த அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி இன்று அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் ஜி.எஸ்.டி. சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
    • இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    திருப்பரங்குன்றம்:

    முருகப்பெருமானின் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு சொந்தமாக மலையடிவாரத்தில் சரவணப்பொய்கை அமைந்துள்ளது. திருப்பரங்குன்றம் மலை மீது விழும் மழை நீர் இந்த குளத்தில் வந்து சேர்கிறது. புனித தீர்த்தமாக கருதப்படும் சரவணப்பொய்கையில் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தி நீராடுவது வழக்கம். உள்ளூர் மக்களும் துணி துவைக்கவும், குளிக்கவும் இதனை பயன்படுத்தி வந்தனர்.

    திருப்பரங்குன்றம் பகுதி பொதுமக்கள் தங்களது துணிகளை துவைக்கவும், குளிக்கவும் குளத்தில் ஷாம்பூ, சோப்பு போன்ற ரசாயன பொருட்களை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் தண்ணீர் கடின தன்மை அடைந்து ஆக்சிஜன் அளவு குறைந்தது. இதன் காரணமாக சரவணப் பொய்கையில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்தது.

    மேலும் கோவில் குளம் என்றும் கருதாமல் குளக்கரையில் மலம் கழிப்பதால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. இதனை அறியாத வெளியூர் பக்தர்கள் புனித நீர்த்தம் என எண்ணி அதில் குளிக்கின்றனர். இதனால் பல பாதிப்புகள் ஏற்படுகின்றன.

    இதனை அடுத்து கோவில் நிர்வாகம் மும்பை பாபா அணு ஆராய்ச்சி நிறுவனம் மூலம் தண்ணீர் தூய்மை செய்யும் பணியில் கடந்த 2 ஆண்டுகளாக ஈடுபட்டது. தொடர் மழை காரணமாகவும் தற்போது தண்ணீர் சுத்தமாக உள்ளது. இதையடுத்து பொதுமக்கள் துணி துவைப்பதை தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டு மூடப்பட்டது.

    சரவணப் பொய்கையை பயன்படுத்தி வந்த பொதுமக்கள் துணிகளை துவைக்க வசதியாக விருதுநகர் எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் ரூ.44 லட்சத்தில் குளம் அருகில் கட்டப்பட்டுள்ள குளியல் மற்றும் சலவை கூடத்தை இலவசமாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது.

    ஆனால் பொதுமக்கள் அதனை பயன்படுத்தாமல் மூடப்பட்டிருந்த குளத்தின் தடுப்புகளை உடைத்து மீண்டும் துணி துவைக்கவும், குளிக்கவும் செய்தனர். இதனால் சரவணப் பொய்கை மீண்டும் பழைய நிலைக்கே மாறும் நிலை ஏற்பட்டது.

    இதையடுத்து குளத்தில் அத்துமீறி குளிப்பவர்கள் மீது காவல்துறையினர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவில் நிர்வாகம் எச்சரித்தது. மேலும் சரவணப் பொய்கை பகுதியில் 8 பேர் கொண்ட குழுவினர் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

    இதனை கண்டித்தும், சரவணப்பொய்கையை மீண்டும் பயன்படுத்த அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி இன்று அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் ஜி.எஸ்.டி. சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மறியலில் ஈடுபட்டவர்கள் சாலை மறியலை கைவிட்டு திருப்பரங்குன்றம் முருகன் கோவில் வாசலில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லை. இதையடுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்ட பெண்களை போலீசார் கைது செய்து அங்குள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

    இதனிடையே பொது மக்கள் மறியல் குறித்து அறிந்த திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களை சந்தித்தார்.

    அதனைத் தொடர்ந்து சரவண பொய்கை பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்தது. இதில் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., கோவில் துணை ஆணையர் சுரேஷ், தாசில்தார் பார்த்திபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    அப்போது கழிவுகளால் சரவண பொய்கை மாசு அடைவது குறித்து கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில் தற்காலிகமாக 2 மாதம் மட்டும் சரவண பொய்கையை மக்கள் பயன்பாட்டுக்கு திறக்க உயர் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    இந்த கூட்டத்தில் வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன், மரக்கடை முருகேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • திண்டுக்கல் மாவட்டம் ஆடலூர், சோலைக்காடு, கொக்குப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன.
    • ஆடலூர்-கே.சி. பட்டி மலைப்பாதையில் சோலைக்காடு பிரிவு அருகே விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    பெரும்பாறை:

    திண்டுக்கல் மாவட்டம் ஆடலூர், சோலைக்காடு, கொக்குப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இதனால் விவசாயிகள் தோட்டத்துக்கு செல்ல முடியாமல் அச்சமடைந்துள்ளனர்.

    யானைகள் நடமாட்டத்தால் கூலித் தொழிலாளிகளும் வேலைக்கு வருவதில்லை. இந்த நிலையில் சோலைக் நாட்டைச் சேர்ந்த பூதப்பாண்டி, பட்டத்து வேல், கோபி, பரமேஸ்வரி ஆகியோரது தோட்டத்திற்குள் காட்டு யானைகள் புகுந்து அங்கு பயிரிடப்பட்டிருந்த வாழை, காபி, ஆரஞ்சு போன்ற பயிர்களை நாசப்படுத்தின.

    மேலும் இரவு நேரங்களில் அவை ஊருக்குள் வலம் வருகின்றன. எனவே பொதுமக்களை அச்சுறுத்தி அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை விரட்ட வேண்டும் என்று ஆடலூர்-கே.சி. பட்டி மலைப்பாதையில் சோலைக்காடு பிரிவு அருகே விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவலறிந்த கன்னிவாடி வனச்சரகர் ஆறுமுகம், வனவர் அறிவழகன், வனகாப்பாளர் பீட்டர் ஆகியோர் நேரில் சென்று மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் தோட்டங்களுக்கு சென்று வனத்துறையினர் பார்வையிட்டனர். அப்போது அரசு மூலம் நிவாரணம் பெற்றுத் தர ஏற்பாடு செய்யப்படும். யானைகளை விரட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் உறுதி அளித்தனர்.

    இதனையடுத்து விவசாயிகள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    ×